
நாகூர் புலவர்கள்குலாம் காதர் நாவலர்
புலவர் ஆபிதீன்
சித்தி ஜூனைதா பேகம்
வஹாப் சாஹிப்
ஜஸ்டிஸ் இஸ்மாயில்
கமலப் பித்தன்
ரவீந்தர்
நாகூர் சலீம்
ஜாஃபர் முஹ்யிதீன்
தூயவன்
இஜட். ஜஃபருல்லா
கதீப் சாஹிப்
சாரு நிவேதிதா
நாகூர் ரூமி
ஆபிதீன்
கையும்
|
பதிவுகள்
கீற்று
திண்ணை
தமிழ்மணம்
தமிழரங்கம்
மதுரை
மின்தொகுப்பு
நூலகம்
|
|
Abedeen's
Home

Nagore, where the tomb of the 16th century Sufi saint Hazrath Syed Shahul Hameed
Quadir Wali is situated , has witnessed communal harmony for over four
centuries. Part of the ancient port town of Nagapattinam on the east coast, it
is about 350 km from Chennai. Nagapattinam itself has represented a cultural mix
since the days of its Chola rulers. A noted Jain centre, Choodamani Vihara, was
located here.
Together with the shrine of Our Lady of Health at Velankanni, 10 km from
Nagapattinam, and the Subramanya temple at Sikkal, 6 km from the town, the
Dargah at Nagore forms a trio of religious significance that attracts large
crowds of Hindu worshippers from different regions.
The 'Andavar Dargah' like the one at Ajmeer in Rajasthan, is an important
religious centre for Muslims in the South. The annual Kandoori festival, which
draws Hindus and Muslims, is an example of religious harmony.
Hazrath Syed Shahul Hameed was reputed to be the 23rd descendent of Propher
Muhammad (Sal). He was born at Manickapur near Allahabad in 1504 A.D. After 10
years of religous education, Shahul Hameed embarked upon a tour of different
parts of the world. Kayalpattinam and Keelakkarai, both on the east coast, and
Thanjavur were among the places in Tamil Nadu he visited. The saint is believed
to have cured the ruler of Thanjavur, Achuthappa Naicken, of an illness. The
ruler, as a mark of gratitude, offered expensive gifts to the saint, who,
however, accepted only a piece of land at Nagore. Saint Shahul Hameed lived at
Nagore for 28 years, serving the people irrespective of caste, creed or religon
and preaching broad-mindedness, social equity, tolerance and universal
brotherhood. When he passed away at the age of 68, the body was entombed at
Nagore.
-S. Viswanathan ,Frontline, August 25,1995-
Heroic
Battles of Hazrat Sayyid Abdul Qadir Shahul Hameed against Portuguese
MUSLIM RESISTANCE
The Great Admiral, Kunjali
Marikayar, serving under the Zamorins (rulers) of Kerala, who was already
fighting the Portuguese in the Western Coast, came forward to help the Muslims
of Tamil Nadu. A Prince of Sarandib, Maya Dunne (d.1581 AD) also lent him a
helping hand in his fight against the Portuguese.
But far more important than
all these efforts to contain the Portuguese, another Great Force was active:
That Great Force was personified in Hadrat Sayid Abdul Qadir Hamid (910 - 978
AH/ 1504-1570 AD), also known as Hadrat Qadir Wali. The Great Saint had a noble
group of 404 faqirs (mendicants); one of them was Shaykh Sadak Ibrahim
Maraikayar of Kayalpattinam. They were all ascetics and without any desire for
worldly possessions and were engaged in the service of humanity irrespective of
caste, creed and religion. Hadrat Qadir Wali inspired persons like Kunjali
Marikayar, Maya Dunne, and the rulers like Sethupathis of Ramnad, Sarfoji
Maharaja, Achuthappa Naicker, Pratab Singh and other rulers of South India to
wage heroic battles against the Portuguese. He also met Krishnadevacharya of
Vizayanagar kindgom.
The biographers of Hadrat
Qadir Wali refer to an incident in which the armed men of the King of Kudagu
Desam tried to attack him bot most of them died in their attempt. Kudagu Desam
is taken to mean Goa, the Portuguese centre in India.The battles between the
Portuguese and the Kunjalis were not confined to the coast of Kerala alone; they
extended to the coast of Tamil Nadu also, as already stated. Some battles were
fought near the coast of Vedalai which is situated between Kilakarai and
Rameswaram and other places in Sarandib.
The sea adjacent to Vedalai
became the centre of naval battles between Portuguese and Arwi Muslims from the
year 1525 AD onwards.
In 1525,1527,1536 and 1539 AD,
the Muslim warriors of Zamorin went to Sarandib to help king Maya Dunne in his
fight against the Portuguese. Three Muslim Generals Kunjali Marikayar, Patchai
Marikayar and Ali Ibrahim, inspired by Hadrat Qadir Wali led these expeditions.
In the war of 1536 AD, Kunjali Marikayar inflicted heavycasualities on the
Portuguese, destroyed many of their ships, chased them upto Tuticorin and took
rest at Vedalai.
As a result of intimacy that
developed between the Kunjalis and Hadrat Qadir Wali, one of the Kunjalis
accompanied the Saint to Nagore and lived there. The street in Nagore where he
had his residence is still there and is named after him as Kunjali Marikayar
Street.
Alfonso's successor , Manoel de Souza (ruled 1515-1536 AD) was killed in another
encounter involving the Saint and resulting in the ennd of the Portuguese rule
in Tamil Nadu. Shaikh Sadaq Maraikayar referred to above was in the contingent
which boarded the ship to mount an attack on Manoel de Souza, was pushed down by
him; and de Souza died by drowning. This happened on the 3r of Ramadan 943
AH/1536 AD.
Later Hadrat Qadir Wali
lovingly commanded Shaykh Sadaq to get detatched from the group of faqirs and to
get himself attached to family life by getting married. He did as commanded by
the Holy Saint, who also prayed that great men like Saints,preachers,
philanthrophists and reformers of the world would continue to be born in his
lineage. And what the Holy Saint prayed for, has been continuing to this Day.
But for the heroic resistance
generated by Saint Shahul Hamid Nayagam, Tamil Nadu would have become another
Goa. The noble Saint had been directed by his spiritual mentor, Hadrat Muhammad
Ghawth of Gwalior (970 AH.1562 AD), to get himself stationed in the Arwi region
for rendering the required services.
As in the case of several
other Muslim Saints, the activities of Hadrat Qadir Wali, also were not confined
to the spiritual field alone; he worked for the people's social well-being and
material welfare as well. He redeemed the people from the Portuguese atrocities.
Having extensively travelled in Tamil Nadu and Sarandib, preaching the religion
of Islam, he passed away in 978AH/1570 AD at Nagore where he is laid to rest.
His sacred shrine has become a great centre of pilgrimage for people of all
religions persuasions.
Thanks :
Afdalul ' Ulama Dr. Tayka Shu'ab 'Alim B.A.(Hons),M.A., Ph.D.,M.F.A
Refer his book 'Arabic, Arwi and Persian in Sarandib and Tamil Nadu' (Page 33-38
/ Chapter 3 'European onslaught in Arwi Area') Published by Imamul Arus Trust -
Madras for The Ministry of State for Muslim Religion and Cultural Affairs,
Colombo, Sri Lanka.
ஞான சூரியன் நாகூர் ஆண்டவர்
வரலாறு'
கே.எம். ஜான் பிரிட்டோ
மாறன் : நாகூர் தர்கா மட்டும் பிரசித்திப் பெறக் காரணம் என்ன ?
சாதிக் : புனிதர்களில் மகத்தானவர்; மகான்களில் சிறப்புடையவர்; உலகத்தின் பல
பகுதிகள் சென்று, இறுதியில் நாகூர் வந்து தங்கியவர். இவைகள் மட்டுமின்றி, நாகூர்
இயற்கை எழில்மிக்க ஊர். கிழக்கே வங்காள விரிகுடா கடல்; மேற்கே கழனிகள் மிகுந்த
நஞ்செய் நிலம்; வடக்கே தமிழ்நாடு, பாண்டிச்சேரி இரு மாநிலங்களை இணைக்கும் வெட்டாறு
ஓடும் பாலம்; தெற்கே துறைமுகம் அமைந்த மாவட்டத் தலைநகரமாம் நாகப்பட்டினம். எனவேதான்
நாகூர் சிறப்புப் பெறுகிறது. இன்னும் ஒரு முக்கியமான உண்மை என்னவென்றால்... நாம்,
நாட்டில் நடத்தும் ஆட்சியைப் போலவே நம் கண்ணுக்குப் புலப்படாத ஆன்மீக அருளாட்சி
ஒன்றும் நடந்து கொண்டிருக்கிறது. அந்த ஆட்சியில் நாகூர் நாயகம், அஜ்மீரின்
அடக்கமாகியிருக்கும், 'கரிபேநவாஜ்' (ஏழைகளின் தோழன்) என்ற சிறப்புப்பெயர் பெற்ற
ஹாஜா நாயகம் போன்றவர்கள் பேரரசர்கள் ஆவார்கள்.
மாறன்: நாகூர் என்று அழைக்கப்படுவதற்கு எதுவும் காரணம் இருக்கிறதா?
சாதிக் : மாறன்..! நாகூர் என்றால்..நா+கூர்; அதாவது கூர்மையான நா உடையவர்கள், நா
வன்மை மிக்கவர்கள் என்று சொல்லலாம். எனக்குத் தெரிந்தவரை ஆரம்பத்தில் இன்றைய நாகூர்
பகுதி மணல்மேடுகள் நிறைந்த, அவைகளில் மிக அதிகமாக 'புன்னை மரங்கள், நாவமரங்கள்
இருந்ததாகவும் இதனால் 'புன்னைவனக்காடு' என்கிற பெயர் இருந்ததாகவும், அதுவே
பின்னாளில் தமிழில் புலமைமிக்க சான்றோர்கள் வாழ்ந்ததால் 'புலவன்காடு' என்று
அழைக்கப்பட்டதாகவும் சொல்வார்கள். ஏன்..இப்போதும் கூட புகழ் மிக்க கவிஞர்
பெருமக்கள் நாகூரில் ஜீவித்துக் கொண்டும், உதித்துக் கொண்டும்தான் உள்ளார்கள்.!
மாறன் : சரி..சாதிக்! அப்படியானால்.. நாகூரில் அடங்கியிருப்பவர்
வணங்குதற்குரியவர்தானே?
சாதிக் : நோ..மாறன்! மரியாதைக்குரியவர். போற்றுதலுக்குரியவர்;
கண்ணியத்திற்குரியவர். அவரை யாரும் வணங்க முடியாது. காரணம் அவர் வணங்கியதே நாம்
வணங்குகின்ற இறைவனைத்தான்! 'ஏக இறைவனாகிய அல்லாஹ்வுடன் ஒன்றித்து விடு; இல்லையேல்
அல்லாஹ்வை நெருங்கியவர்களோடு ஒன்றித்து விடு; நிச்சயமாக அவர்கள் அவனளவில் உன்னைக்
கொண்டு போய்ச் சேர்ப்பார்கள்' என்று ஒரு கருத்து உண்டு. அதன்படி இறைவனிடம் நம்மைக்
கொண்டு போய் சேர்க்கவல்லவர் என்கிற அளவில் அவரோடு ஒன்றித்து விடலாம்.. அவ்வளவுதான்.
மாறன் : அப்படியானால்..முஹம்மது நபி வணக்கத்திற்குரியவரா?
சாதிக் : அல்லவே அல்ல மாறன்; முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலமே புனித 'குர் ஆன்'
வெளிக்குணரப்பட்டது என்கிற வகையிலும், சொல்லாலும் , செயலாலும், ஆட்சியினாலும்,
உண்மை,அன்பு, மனித நேயம், இவைகளை சொல்லியும் செய்து காட்டியும் வாழ்ந்த ,
மகானுக்கெல்லாம் மகான் என்கிற வகையில் மிகவும் போற்றுதலுக்குரியவர். அல்லாஹ்வின்
திருத்தூதரும் ஆவார்; இதைப் பற்றி 'நாம் தேர்ந்தெடுத்துக் கொண்ட நபி' என்றும் '
மாநிலத்தின் மணி விளக்கு' என்றும், திருமறையே கூறுகிறது! மற்றபடி முஹம்மது நபி(ஸல்)
அவர்களும் வணங்குதற்குரியவர்கள் அல்ல! ஏக இறைவனும், அளவற்ற அருளாளனும்,
அன்புடையோனுமாகிய அல்லாஹ் மட்டுமே வணங்குதற்குரியவர்! ஒரு ஒற்றுமை என்னவென்றால்
மாறன்..நீ சொன்ன முஹம்மது நபி (ஸல்) அவர்களின் இருபத்தி மூன்றாவது சந்ததிதான்
நாகூரில் அடக்கமாகியிருப்பவர்கள்!
மாறன் : சாதிக்! நான் உன்னை நண்பனாகப் பெற்றதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்;
அதுவும் மாற்று மதத்தைச் சேர்ந்த நீ, என்னை இவ்வளவு அன்பாக நேசிக்கிறாயே! இன்றைய
நிலையில் நம் நாடும், ஏன் இந்த நாகூர் கூட மதக் கலவரத்தால் எவ்வளவு
பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது! இது குறித்தெல்லம் நீ எதுவும் சிந்திப்பதுண்டா?
சாதிக் : மாறன்.. முதலில் நீ மாற்று மதம் என்று சொன்னாயே..அதில் எனக்கு கொஞ்சமும்
உடன்பாடு இல்லை. முஸ்லீம் மதம் என்று ஒன்று நிச்சயமாக இல்லை. இஸ்லாம் மார்க்கம்
உண்டு. மார்க்கம் என்றால் வழி. எதற்கு வழி? மறுமைக்கு வழி! அந்த வழி இஸ்லாத்தில்
சிறப்பாக இருப்பதாக நான் கருதுகிறேன். உன் மதத்தை சிறப்பாக கருதுகிறாய். நான்
கருதுவதும், நீ கருதுவதும் மற்ற மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் கருதுவதும் அவரவர்
எண்ணப்படி ஏற்புடையதாக இருக்கிறது. காரணம் எந்த மார்க்கமும் துன்மார்க்கத்தைப்
போதிக்கவில்லை; பிற மார்க்கதவர்களை நிந்திக்கிறவன் உண்மையான இஸ்லாமியனாக இருக்க
முடியாது! "தொழுகையைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும் என்னை அடைந்து கொள்ளுங்கள்,
நான் பொறுமையாளர் பக்கமே இருக்கிறேன்!' என்று இறைவன் திருமுறை மூலம்
வெளிப்படுத்துகிற'ன்; அப்படியென்றால் தொழுகை செய்கிறவனிடத்தில் பொறுமை இல்லையேல்
அவனிடம் இறைவன் நிலைப்பதில்லை! இந்த நிலவரம் தெரியத சில அறிவிலிகள் கலவரம்
செய்கின்றார்கள். அந்த அறிவிலிகள் அனைத்து மார்க்கத்திலும் இருக்கத்தான்
செய்கின்றார்கள்! நாகரீக வளர்ச்சியில் மனிதர்களின் சராசரி சிந்தனை கூட குறைந்து
விட்டதோ.. எனக் கருதுகிறேன். பூமி இருட்டாய் இருந்த காலத்தில் திருட்டை
அறிந்திடவில்லை; தரைக்கு மதமில்லை, தண்ணீருக்கு மதமில்லை; விதையின்றி பயிராகும்
உப்புக்கு மதமில்லை; என்னவோ நம்மில் சிலர் அறியாமையில் அலைகின்றார்கள்! எல்லா
மார்க்கத்தாருக்கும், ஊர்கள் தோறும் கோவில்கள் இருக்கிறதே தவிர..
அக்கோவில்களுக்குச் செல்கின்ற மனிதர்களிடத்தில் மனமும், குணமும், மனித நேயமும்
குன்றிப் போய்விட்டது; இந்தக் காலக் கட்டதில் எல்லா மார்க்கங்களிலுமே சில
போதனையாளர்களிடமும் ஞானம் இல்லை; மனிதர்களிடையே.. மனிதனாக வாழவேண்டிய
போதனையாளன்..தானாய் முளைக்கும் முடியாலோ..உடையாலோ..வண்னத்தாலோ..சில
உபகரணங்களாலோ..தன்னை மாறுபடுத்திக் காட்டிக் கொள்கின்றான்! ஞானத்தை தூவுகின்றவர்களே
போதனையாளர்கள்; ஆன்மாவிற்கு மதம் இல்லை; இதை புரிந்து கொள்ளாத, உடல் உறுப்புகளுக்கு
'வாதம்' வந்தாலே தாங்கி கொள்ள முடியாத மனிதர்களில் சிலர் 'தீவிரவாதம்' அதுவும்
மதம், ஜாதியின் பெயரால் செய்வது அநாகரீகமாக அருவருப்பான
அயோக்கியத்தனமான,வருவாய்க்காக செய்கின்ற ஈனத்தனமான செயலாகும்! அது
மட்டுமின்றி..உயர்திணையில் ஆண்பாலோ..பெண்பாலோ உறுதியோடு, உண்மையோடு
இருப்பவர்களுக்கு பின்பலம் தேவையில்லை; மும்மூன்றாகவோ கோழையாகவோ உயர்திணையில்
எப்பாலென சந்தேகப்படும்படியான பிராணிகளுக்குத்தான் பின் பலம் தேவை! இவைகளை மாறன் நீ
புரிந்து கொள்ள வேண்டும்; இன்னொன்று நம் மார்க்கம் வெவ்வேறாக இருக்கலாம் ஆனாலும்
நாம் மனிதர்கள்! மனிதர்களிடத்தில் நேயம் இருக்க வேண்டும்..
மாறன் : இப்போ ஒரு பையன் ஒரு நோட்டிஸ் கொடுத்துட்டு போறான்..அதைப் படிச்சா ஒரே
குழப்பமாக இருக்கு! நீயே படிச்சிட்டு விளக்கம் சொல்லு..
சாதிக் : மாறன்..நான் முதல்லேயே படிச்சிட்டு கீழே போட்டுட்டேன்..இப்படியொரு கூட்டம்
குழப்புறதுக்குன்னே இருக்கு! வாழும்போதே செத்துக் கொண்டிருப்போர் மத்தியில்,
செத்தும் வாழ்பவர்கள் மகான்கள்; சிலர் இருக்கும்போதே மறக்கப்படுகின்றார்கள். சிலர்
இறந்த பின்னும் நினைக்கப் படுகின்றார்கள். அவர்களே மகான்கள்! மனிதன் படைப்புகளால்
ஈர்க்கப்படுகின்றான். மகான் படைத்தவனால் ஈர்க்கப்படுபவர்; மனிதன் எண்ணங்களின்
அடிமை. எண்ணங்கள் மகானின் அடிமை; உண்டு வாழ்வது மனிதனின் லட்சியம். இறைவனுக்கு
தொண்டு செய்வது மகானின் லட்சியம்; காலங்களை மனிதன் உணவால் கழிக்கின்றான். மகானோ
உணர்வால் காலத்தை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்கிறார்; மனிதனின் வாழ்வு ஒரு கனவு.
மகானின் கனவும் ஒரு வாழ்வு; மனிதனோ தனக்காக வாழ்கிறான். மகானோ மற்றவர்களுக்காக
வாழ்கிறார்; மனிதன் மரணத்தை வெறுக்கின்றான். மகானோ மரணத்தை நேசிக்கின்றார்.
மனிதனின் உறக்கம் ஒரு மரணம்; மகானின் மரணமும் ஒரு உறக்கமே! இவைகளே மனிதனுக்கும்
மகானுக்குமுள்ள வேறுபாடு. வேகத்திற்கும் விவேகத்திற்கும் உதிப்பவன் மனிதன்.
விவேகத்திற்கும் ஆன்மீகத்திற்கும் உதிப்பவர் மகான்; அமைவதும் அமைத்துக் கொள்வதும்,
அவைகளின் வெற்றியும், தோல்வியும் கிட்டுமானால் அது மனித வாழ்க்கை; தூய ஞான
வாழ்க்கையில் தோல்வியே இல்லை! கட்டுப்படுகிறவன் மனிதன். கட்டுப் படுத்துகிறவன்
புனிதன்; அடங்கி நடப்பவன் மனிதன். அடங்கி அடக்குபவன் புனிதன்; கற்றவன் மனிதன்.
கற்பதில் தேறி நிற்பவன் புனிதன்! கரப்பவர்கள் மனிதர்கள். சுரப்பவர்கள் புனிதர்கள்;
மனிதன் சரியாகவும் சளியாகவும் இருப்பான். புனிதர் சரியாக மட்டுமே இருப்பார்! இப்படி
நிறைய சொல்லலாம்! கடவுள் இல்லை என்பவர்கள் கூட சந்திப்புகளில், தலைவனின் சிலையை
வடித்து வழிபாடு செய்கின்றனர்! ஆக.. மகான்கள் மரணிப்பதில்லை; மறைந்து வாழ்வதே
உண்மை! இறைவன் துணை கொண்டு மகான்கள் மறைந்திருந்து மனிதனை காக்க முடியும், அதுபோல்
மறைவான விஷயஙளையும் அறிய முடியும். இந்த நம்பிக்கை உள்ளவர்கள் வாஞ்சையோடு
தர்காவுக்கு வருகின்றார்கள்; நம்பிக்கை இல்லாதவர்கள் வஞ்சனையோடு வருகிறார்கள்!
"நம்பினவனுக்கு ஜெயம்; நம்பாதவனுக்கு பயம்! நம்பினால் நம்பு; நமக்குள் ஏன் வம்பு?"
என்று இம்மாதிரியான நபர்களுக்காகத்தான் கவிஞர் நாகூர் சலீம் சொல்லியிருப்பார்
போலும்..
நன்றி : கே.எம்.ஜான் பிரிட்டோ
'ஞான சூரியன் நாகூர் ஆண்டவர் வரலாறு' - கே.எம். ஜான் பிரிட்டோ
வெளியீடு : J. ஐஸக் நியூட்டன் 1/41-F அன்னை இல்லம் ஸ்ரீ ரெங்கராஜபுரம்,
சிவபுரம்(Po) கும்பகோனம்-612401
அருட் பணியும், அறப்
போரும்
Dr. P.M. அஜ்மல்கான்
முதலாவதாக முஸ்லீம்களின் வியாபார ஆதிக்கத்தையும், அடுத்து முஸ்லீம்களின்
மார்க்கத்தையும் அழித்து, முஸ்லீம்களையும் கொன்றழிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு
செயல்பட்ட போர்துக்கீசியர் அப்போது முஸ்லீம்களின் அதிகமாக வாழ்ந்து வியாபாரம்
செய்து வந்த கடற்கரைப் பகுதிகளின் மீது கவனம் செலுத்தத் தொடங்கினர். அதற்காக
அவர்கள் கீழக்கரை முதல் காயல் பட்டினம் வரையிலான பகுதியை முதலில்
தேர்ந்தெடுத்தார்கள். இங்கெல்லாம் அவர்கள் புரிந்த கொடுமைகளை வர்ணித்து விட
முடியாது.
கொள்ளைகள், மதமாற்றம் முதலிய அட்டூழியஙளின் மூலம் அவர்கள் மக்களை பயமுறுத்தினர்.
முதலில் முஸ்லீம்கள் அடுத்து ஹிந்துக்கள் என்று அவர்கள் கவனம் செலுத்தினர்.
பாதிக்கப்பட்ட இரு வகுப்பினரும் எவ்வளவுதான் வீரமாக எதிர்த்துப் போரிட்டாலும் போதிய
அளவுக்கு உள்நாட்டு அரசாங்கப் பாதுகாப்பு கிட்டவில்லை. சேதுபதி மன்னர்கள் மட்டும்
போர்த்துக்கீசியருக்கு எதிராக செயல் பட்டனர். சேதுபதிமீது குரோதம் கொண்ட மதுரை
மதுரை நாயக்க மன்னர்களோ போர்துக்கீசியரின் லஞ்சம், ஆசை வார்த்தைகளில் மயங்கி
அவர்கள் விரும்பியபடி செயல்பட அனுமதி அளித்தனர். இவ்வாறு நாயக்க மன்னர்கள்
தேசத்தின் பொது நலனுக்கு விரோதமாக செயல்பட்டனர்.
தமிழக முஸ்லீம்களைக் காக்க கள்ளிக்கோட்டை ஜாமரின் அரசரின் கடற்படைத் தலைவரான
குஞ்சாலி மரைக்காயர் முன் வந்தார். மாயதுன்னே என்னும் இலங்கை இளவரசர் ஒருவரும்
சேர்ந்து கொண்டார். அதையெல்லம் விட முக்கியமான நிகழ்ச்சி ஒன்று உண்டு.
அதுதான் நாகூர் பாதுஷா நாயகம் சுல்தான் செய்யிது அப்துல் காதிறு ஷாஹ¤ல் ஹமீது
வலியுல்லா அவர்கள் தங்களது துணைவர்களான 404 ·பகீர்களுடன் சேர்ந்து குஞ்சாலி
மரைக்காயருடனும் இதர தமிழகக் கரையோர மரைக்காயர்களுடனும் போர்த்துக்கீசியக்
கொள்ளையருக்கு எதிராகப் போர் நடவடிக்கைகளை மேற்கொண்டது ஆகும். அவர்களோடு அப்போது
சேர்ந்திருந்தவர்களில் காயல்பட்டினம் ஷெய்கு சதக்கு மரைக்காயர் அவர்களும் ஒருவர்
ஆவார்கள்.
பாதுஷா நாயகம் அவர்களுடைய வரலாற்று நூல்களில் 'ஆண்டகை அவர்களின் சத்துருக்களான
குடகு தேசத்து அரசனின் படையினர்' ஆண்டகையவர்களைத் தாக்க வந்ததும் அவர்களில்
பெரும்பாலோர் அழிந்து பட்டதும் கூறப்படுகிறது. போர்த்துக்கீசியர்களின் இந்தியத் தலை
நகரான கோவா ,குடகு தேசப் பகுதியே என்பதும் பாதுஷா நாயகம் அவர்களின் காலத்தில்
அப்பகுதி போர்துக்கீசியர்களின் வசமே இருந்தது என்பதும் இச்செய்தியை உறுதிப்
படுத்துவதாகும்.
அவ்வாறு நடந்த போர் ஒன்றிலே மானுவேல் டிசூஸா என்னும் போர்துக்கீசியக் கடர்படைத்
தலைவன் , பாதுஷா நாயகம் அவர்களின் வழிகாட்டலில் நின்று போரிட்ட முஸ்லீம் வீரர்களால்
கொல்லப்பட்டான் என்று தெரிகிறது. நாகையில் வீற்று இன்றும் நல்லருள் புரிந்து
கொண்டிருக்கும் வலி நாயகர் அவர்கள், நாட்டின் பாதுகாப்புக்கான போரிலும் பங்கு
கொண்டு வெற்றி கொண்டார்கள் எனும் செய்தி எண்ணியெண்ணி போற்றத் தக்கதாகும்.
வரிசையாக நான்கு குஞ்சாலி மரைக்காயர்கள் கடற்படைத் தலைவர்களாக விளங்கினர்.
அவர்களின் நினைவை நிலை நாட்டும் வகையில், சுதந்திரப் போராட்டத்தில் அவர்களின்
பெரும் பங்கை நினைவு கூறும் வகையில் இந்திய அரசாங்கம் தனது கடற்படைத் தளம்
ஒன்றிற்கு 'குஞ்சாலி மரைக்கார்' என்று பெயர் சூட்டியுள்ளது இங்கு நன்றியுடன்
குறிப்பிடத்தக்கதாகும்.
அந்தக் குடும்பத்தில் பலருக்கும் குஞ்சாலி மரைக்காயர் என்ற பெயர் விளங்கி வந்தது.
கடற்படைத் தலைவர் குஞ்சாலி மரைக்காயரோடு நாகூர் நாயகம் அவர்களுக்கு ஏற்பட்ட
தோழமையின் விளைவாக அக்குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு குஞ்சாலி மரைக்காயர்
,வலியுல்லா அவர்களின் கூடவே நாகூருக்கு வந்து விட்டார். அவர் வாழ்ந்த தெருவே
தர்காவின் அருகே இன்றும் உள்ள 'குஞ்சாலி மரைக்காயர்' தெரு ஆகும்.
குஞ்சாலி மரைக்காயருக்கும் போர்த்துக்கீசியருக்கும் இடையே நடைபெற்ற கடற் போர்கள்
பல. அவற்றுள் சில போர்கள் கீழக்கரைக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையே அமைந்துள்ள
வேதாளை கடற்கரையில் நடந்தவையே. அவ்வாறு நடந்த ஒரு கடற்போரில் குஞ்சாலி
மரைக்காயருக்குத் தோல்வி ஏற்படவே அவரை ஜாமரின் அரசர் கள்ளிக்கோட்டைக்குத் திரும்ப
அழைத்துக் கொண்டார்.
வேதாளையில் இன்றுமந்த ஷ¥ஹதாக்களீன் (வீரத் தியாகிகளின்) சமாதிகள் பல நூற்றுக்
கணக்கில் காணப்படுகின்றன. மீஜான் கற்கள் மணலில் புதையுண்டு கிடக்கின்றன.
ஆய்வாளருக்கு. சிறப்பாக புதைபொருள் ஆராய்ச்சியாளருக்கு நல்ல செய்திகள்
கிடைக்கக்கூடிய இடம் அது. அத்தகையோரின் கவனத்தை அது இதுவரை கவர்ந்ததாகத்
தெரியவில்லை...
....... ......... ..........
முன்பு சொன்னபடி தமிழகத்தில் கேரளத்துக் குஞ்சாலி மரைக்காயரும் பாதுஷா நாயகம்
ஷாஹ¤ல் ஹமீது வலியுல்லா அவர்களும், காயல் பட்டினம் ஷெய்கு ஸதக்கு மரைக்காயர்
அவர்களும் போர்த்துக்கீசியர்களுக்கு அவ்வளவு பலத்த அடி கொடுத்திருக்கவில்லை
யென்றால் தென் தமிழகமும் மற்றொரு 'கோவா' ஆகி இருக்கும் என்பதில் ஐயமில்லை.
தமிழகத்தின் ஆபத்தான நிலைமையை உணர்ந்த பாதுஷா நாயகமவர்களின் குரு நாதரான முஹம்மது
கெளது குவாலியர் (வலி) அவர்கள் , தம் சீடரான ஷாஹ¤ல் ஹமீது (வலி) அவர்களைத்
தமிழகத்திலேயே தங்கி இஸ்லாமியப் பணி புரியப் பணித்தார்கள். அவர்கள் ஆன்மீகத்தைப்
பரப்பும் பணியோடு தம் சேவையை நிறுத்திக் கொள்ளாமல் தம்மைச் சுற்றியுள்ள பரங்கிப்
பகைவர்களின் தொல்லைகளிலிருந்து மக்களை விடுவிப்பதையும், தம்முடைய கடமையாக
உணர்ந்தார்கள். எனவே அன்னிய ஆதிக்கத்தைப் பற்றி பொதுமக்கள் மத்தியில்
எச்சரித்தார்கள். குஞ்சாலி மரைக்காயர் போன்ற படை வீரர்கள் மத்தியில் வீரத்தை ஊட்டி
உபதேசித்தார்கள். மட்டுமின்றி சேதுபதி அரசர், தஞ்சை அரசர், அப்போதைய இலங்கை மன்னர்
ஆகியோரிடம் சென்றும் அன்னிய ஆட்சியால் விளையும் தீமைகளை விளக்கி அவர்களை
பரங்கியரோடு பொருதச் செய்தனர்.
நாகூர் நாயகர் அவர்கள் தமிழகம் எங்கும் சுற்றிப் பயணம் செய்து தீனைப் பரப்பி
மக்களுக்கு நல்வழி காட்டி இறுதியாக நாகூரில் தங்கி ஹிஜ்ரி 978 -ல் (கி.பி 1570)
காலமானபின் அங்கேயே அடக்கமாகிவிடுகிறார்கள்.
நாகூர் - ஒரு வரலாற்றுப்
பார்வை
ஜெ.ராஜா முகமது M.A
ஜெ.ராஜா முகமது M.A., B.Sc., காப்பாட்சியர் ,அரசு அருங்காட்சியகம் , புதுக்கோட்டை -
622 002
நாகூர் என்றதும் நம் சிந்தைக்கு இனிமையுடன் நினைவுக்கு வருவது நாகூர் ஆண்டவர்
என்றழைக்கப்படும் இறைநேசச் செல்வர் ஹஜ்ரத் செய்யிது காதிர் ஷாஹ¥ல் ஹமீது மீரான்
சாஹிபு அவர்களின் தர்கா ஒன்றுதான். ஆனால் தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப
வரலாற்றிலும், இஸ்லாம் வளர்த்த இன்பத்தமிழ் இலக்கிய வரலாற்றிலும் கூட நாகூர்
சிறப்பான இடம் வகிக்கிறது. இவை குறித்த சில வரலாற்றுச் செய்திகளை இங்கு காண்போம்.
நாகூர், நாகப்பட்டினத்தின் ஒரு அங்கமாகவே இருந்து வந்துள்ளது. கி.பி. 16ஆம்
நூற்றாண்டில் ஷாஹ¤ல் ஹமீது வலி அவர்கள் நாகூருக்கு வந்த பிறகு நாகூரின் வரலாறு ஒளி
பெறுகிறது. போர்த்துக்கீசியர்களின் பதிவேடுகள் நாகூரை 'நாகூரு' என்றும்
நாகப்பட்டினத்தின் முஸ்லீம்களின் குடியிருப்புப் பகுதி என்றும் குறிக்கின்றன.
போர்த்துக்கீசியர்கள் நாகப்பட்டினத்தை 16ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் பிடித்துக்
கொண்டதும் நாகூர் முஸ்லீம்களின் வணிக வரலாறும் தெரிய வருகிறது.
நாகூர் ஷாஹ¥ல் ஹமீது வலி அவர்கள் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள்
ஆவார்கள். இவர்களது காலம் கி.பி 1532-1600 என அறிஞர்கள் கருதுகின்றனர் (1). ஹிஜ்ரி
978ஆம் ஆண்டு (கி.பி. 1558) இவ்வுலக வாழ்வை நீத்தார்கள் எனவும் இவர்களது நினைவாக
முதல் கந்தூரி 1559-ல் நடைபெற்றதாகவும் தர்காவின் வரலாறு கூறும் எழுத்தாளர் ஒருவர்
கூறுகிறார் (2). ஆற்காட்டை ஆண்ட நவாபுகள் இவர்களது பெயரால் தஞ்சாவூர் நகரை காதர்
நகர் என பெயரிட்டனர்(3). நாகூர் பகுதியில் அமைதி வழியில் தனது அன்பு அழைப்பால்
எண்ணற்ற மக்களை இஸ்லாத்தின் பக்கம் கொண்டுவந்த பெருமை நாகூர் ஆண்டகை அவர்களைச்
சாரும். இவர்களது அருட்கொடையைத் தொடர்ந்து பெறும் பொருட்டு தமிழகத்தின் பிற
பகுதியிலிருந்தும் முஸ்லிம் மக்கள் இங்கு வந்து குடியமர்ந்தனர். இஸ்லாமியர்
பெருகினர். இப்பகுதியில் இஸ்லாம் செழித்தோங்கியது.
ஷாஹ¥ல் ஹமீது வலியுல்லா அவர்கள் நாகூருக்கு வருவதற்கு முன்பே அரேபிய நாட்டிலிருந்து
செய்யிது முபாரக் வலியுல்லா அவர்களும், முகமது சித்திக் இப்னு மசூத் அவர்களும்
நாகூரில் தங்கி இஸ்லாமிய மார்க்கப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். இவர்களது
கல்லறைகளும் நாகூரில் உள்ளன(4).
16ஆம் நூற்றாண்டில் நாகூர் பற்றிய வெளிநாட்டார் குறிப்புகளிலும், இலக்கியங்களிலும்
பயணக் குறிப்புகளிலும் ஷாஹ¥ல் வலியுல்லா அவர்களைப் பற்றியோ அல்லது தர்கா பற்றியோ
குறிப்புகள் ஏதும் இல்லை. இதே காலகட்டத்தில் (1545) நாகப்பட்டினம் பகுதிக்கு
வருகைதந்து ஏராளமான பரதவர்களை கிருத்துவ மதத்திற்கு மாற்றம் செய்து கொண்டிருந்த
புனித ப்ரான்சிஸ் சேவியர் அவர்களின் குறிப்புகளிலும் நாகூர் ஆண்டவர் பற்றிய
குறிப்புகள் இல்லை (5).
நாகூர் ஆண்டவர் தஞ்சாவூர் நாயக்க மன்னர் அச்சுதப்ப நாயக்கரின் (1560-1614) நோயினைத்
தீர்த்து வைத்ததாகவும் அவர்களது அருளினால் மன்னனுக்கு ஒரு ஆண் மகவு பிறந்ததாகவும்
'கஞ்சுல் கராமத்து' கூறுகிறது. நாகூர் தர்காவிற்கும் தஞ்சாவூர் நாயக்க
மன்னர்களுக்கும் இக்காலம் முதல் தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால்
இக்காலத்தில் நாயக்க மன்னர்களைப் பற்றி எழுதப்பட்ட ரகுநாதபியுதாயமு, சாகித்ய
ரத்னகாரா, சங்கீதசுதா ஆகிய தெலுங்கு இலக்கியங்களில் நாகூர் ஆண்டவர் பற்றிய
குறிப்புகள் ஏதும் இல்லை. ஆனால் நாயக்க மன்னர்கள் அப்போது நாகப்பட்டினத்தை
ஆக்ரமித்துக்கொண்டிருந்த போர்த்துக்கீசியருடன் பகைமை கொண்டிருந்த காரணத்தினாலும்
நாயக்க மன்னர்கள் முஸ்லீம் மக்களுக்கு ஆதரவாக இருந்தனர் என்பதாலும் நாகூர் ஆண்டவர்
போன்ற வலிமார்கள் மிகப் பெரிய மருத்துவ மேதைகளாகவும் திகழ்ந்தார்கள் என்பதாலும்
இத்தகைய வழக்குகள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று நம்பலாம். (6). இக்காலத்தில் நாகூர்
ஆண்டகையின் செயற்பாடுகள் தொடக்க நிலையில் இருந்ததாகக் கொள்ளலாம்.
இறைநேசச் செல்வர்களான புனித அடியார்களைப் பற்றிய வரலாறுகளும், அவர்களது அற்புத
ஆற்றல்களை சிறப்பித்து கூறும் செய்திகளும் ஏராளம் உண்டு. தொன்றுதொட்டு வழங்கிவரும்
கதைகளை அப்படியே எழுதிவிடுவது என்பது வழக்கமாக உள்ளது. அவற்றை வரலாற்று
நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்தி தெளிவுபடுத்த முஸ்லீம் எழுத்தாளர்கள் போதிய
முயற்சிகளை இதுவரை மேற்கொள்ளவில்லை என்றே சொல்லவேண்டும். நமது வரலாறு பிறரால்
தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாகும். நாகூர் ஆண்டவர்
குறித்து நிறைய படைப்புகள் வெளிவந்துள்ளன. ஆனால் இவர்கள் பற்றிய வரலாற்றுச்
சான்றிதழ்கள் வலுவிழந்து நிற்கின்றன. உதாரணமாக நாகூர் நாயகர் , கடலில் வந்த
கப்பலில் உடைப்பு ஏற்பட்டு தத்தளித்துக் கொண்டிருப்பதை உணர்ந்து தமது கண்ணாடியை
கடல் நோக்கி எறிந்ததாகவும் அக்கண்ணாடி கப்பலில் ஏற்பட்ட உடைப்பை அடைத்ததாகவும்
சொல்லப்படுகிறது. இப்படி ஆபத்திலிருந்து தப்பிய கப்பல் ஹாலந்து நாட்டைச்சேர்ந்த
டச்சுக்காரர்களின் கப்பல் என்றும், இதற்கு நன்றிக்கடனாக டச்சுக்காரர்கள் நாகூர்
நாயக்கருக்கு நன்றி செலுத்தியதாகவும், ஒரு ஆசிரியர் குறிப்பிடுகின்றார் (7). நாகூர்
ஆண்டவர் அவர்கள் காலத்தில் டச்சுக்காரர்கள் கிழக்குக் கடற்கரைக்குப் பகுதிக்கு வரவே
இல்லை. அப்போது நாகப்பட்டினம் பகுதியில் இருந்தவர்கள் போர்த்துக்கீசியர் ஆவார்கள்.
டச்சுக்காரர்கள் முதன்முதலில் 1605ம் ஆண்டிலேயே கிழக்குக் கடற்கரைப் பகுதிக்கு
வருகின்றனர் (8). 1658-ம் ஆண்டில்தான் நாகப்பட்டினம் துறைமுகம் டச்சுக்காரர்கள்
வசமாகிறது (9).
தஞ்சாவூரை ஆண்டுவந்த மராத்திய மன்னர்கள் நாகூர் தர்காவை விரிவுபடுத்துவதற்கு
பல்லாற்றானும் உதவிகள் செய்துள்ளனர். கி.பி. 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை
நாகூர் தர்கா சிறிய கட்டிடங்களுடனேயே இருந்து வந்திருக்கவேண்டும் எனக் கருதலாம்.
மராட்டிய மன்னர் பிரதாப்சிங் (1739-1763) நாகூர் தர்கா கட்டிடங்களை விரிவு
படுத்திக் கட்டினார். இம்மன்னர் நாகூர் தர்கா கட்டிடங்களின் Founder என்று
சொல்லப்படுகிறது. (10). மேலும் பிரதாப்சிங் தர்காவின் பராமரிப்பிற்கு பதினைந்து
கிராமங்களை மானியமாக அளித்ததாக கல்வெட்டுச் செய்தி ஒன்று கூறுகிறது (11). தர்காவில்
உள்ள மிக உயரமான (131) அடி மனோராவைக் கட்டியதும் இம்மன்னரே ஆவார்.
பிரதாப்சிங்கிற்குப் பிறகு வந்த மராட்டிய மன்னர்களும் தர்காவிற்கு பல கொடைகள்
வழங்கியுள்ளனர். இக்கொடைகள் குறித்த செய்திகள் தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் மோடிப்
பதிவேடுகளில் நிறையக் காணப்படுகின்றன. கந்தூரி உற்சவத்தின்போது ஆண்டுதோறும்
மராட்டிய மன்னர்களிடமிருந்து அலங்கார ஆடைகள் வருவது வழக்கமாக இருந்தது (12). நாகூர்
பகுதி ஆங்கிலேயருடைய ஆட்சிக்குட்பட்டபின்னும் மராட்டிய மன்னர்கள் தர்காவின் நிர்வாக
செயல்பாடுகள் குறித்து பெரிதும் அக்கறைகாட்டி வந்தனர். பிரதாப்சிங் கட்டிய மனோராவை
ஆங்கிலேயர்கள் தங்களது கொடிக்கம்பமாகப் பயன்படுத்தி வந்தனர். மராட்டிய மன்னர்கள்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இப்பழக்கம் நிறுத்தப்பட்டதாக ஆங்கிலேயரின் பதிவுகள்
தெரிவிக்கின்றன (13).
மேலும் ஜாதி மத பாகுபாடின்றி இந்துக்களும் முஸ்லீம்களும் தர்காவிற்கு வந்து
வழிபடுவதை ஆங்கிலேயர் வெகுவாகப் பாராட்டி எழுதியுள்ளனர் (14).
இந்து மதத்தைச் சேர்ந்த
பக்தர்கள் பலர் தர்காவின் கட்டிடங்களைக் கட்டுவதற்கு நிறைய பொருளுதவி செய்துள்ள
செய்திகளை தர்காவில் காணப்படும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. 18-ம் நூற்றாண்டில்
நடைபெற்ற கர்நாடகப் போரின்போது பிரஞ்சு தளபதி லாலி நாகூர் தர்காவை கொள்ளையிட்ட
செய்தியும் நமக்கு கிடைக்கிறது (15).
19-ம் நூற்றாண்டில் தர்காவின் தரிசனத்திற்கு வரும் கூட்டம் மிகவும் அதிகரித்துக்
கொண்டுவந்தது. இதனால் தர்காவின் வருமானமும் பெருகியது. ஆகவே தர்கா நிர்வாகத்தைக்
கவனிக்கப் பல குழுக்கள் நியமிக்கப்பட்டன. இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து இந்த
தர்காவைப் போற்றி வந்ததால் ஒரு சமயம் முத்துசாமிப்பிள்ளை என்பவர் தர்காவின்
மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தார் (16). தர்காவிற்கான மானியங்கள்
முறைப்படுத்தப்பட்டன. மானிய நிலங்களிலிருந்து வரும் நெல் வருமானத்தை வலியுல்லா
அவர்களின் சந்ததியினர் நிர்வகித்து வர வழிவகை செய்யப்பட்டிருந்தது (17). 1817-ம்
ஆண்டு அறநிலைய சட்டப்படி ஆங்கிலேய அரசே தர்காவின் நிர்வாகத்துக்கு வந்தது. 1934-ம்
ஆண்டு முஸ்லீம் அறநிலையங்களுக்கென தனிச்சட்டம் ஏற்படுத்தப்பட்டது (18). 1954-ம்
ஆண்டு வக்பு சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டபின் தர்கா நிர்வாகம் இச்சட்டத்தின்படி
முறைப்படுத்தப்பட்டது.
நாகூர் தர்காவில் கந்தூரி 14 நாட்கள் நடைபெறுகிறது. அப்போது இந்தியாவில் பல
பகுதிகளிலிருந்தும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கூடி
வலியுல்லா அவர்களின் அருள் வேண்டுகின்றனர். 9-ம் நாள் பீர் என்னும் பக்கீர் மௌனமாக
அமர்ந்திருக்கும் பழக்கம் ஆந்திர மாநிலம் பெணுகொண்டா தர்கா நடைமுறைப்
பழக்கங்களிருந்து பெறப்பட்டதாக தெரியவருகிறது (19). மேலும் இந்து கலாச்சாரத்
தாக்கத்தினால் பல வழிபாட்டு முறைகள் தர்காவில் பின்பட்டு வருவதைக் காண்கிறோம்.
நாகப்பட்டினத்திலும், நாகூரிலும் முஸ்லிம் வணிகர்கள் பலர் வாழ்ந்து வந்தனர்.
நாகூரில் வாழ்ந்து வந்த முஸ்லிம் வணிகர்கள் பற்றிய செய்திகளும், நாகூர் துறைமுகம்
குறித்த செய்திகளும் 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே நமக்கு கிடைக்கின்றன.
இங்கு வாழ்ந்த முஸ்லிம் வணிகப் பெருமக்கள் கப்பல் உரிமையாளர்களாகவும், கப்பல்
செலுத்தும் தொழிலில் ஈடுபட்டவர்களாகவும், கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று வாணிபம்
செய்பவர்களாகவும் இருந்தனர். முஸ்லிம் வணிகர்கள் அனைவருமே கப்பல்கள்
வைத்திருக்கவில்லை. ஒருசில வணிகர்களுக்குச் சொந்தமாக இருந்த கப்பல்களில் பிற
வணிகர்கள் தங்களது வணிகப் பொருட்களை ஏற்றிச் சென்று வாணிபம் செய்துள்ளனர்.
நாகூர் கடற்கரையில் 16-ம் நூற்றாண்டில் ஐந்து கோயில்கள் இருந்தன. இந்தக் கோயில்கள்
கப்பல்களுக்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தன. இத்துறைமுகத்திற்கு ஒன்றை மரப்பாய்
கப்பலிலிருந்து, 300 டன் எடையுள்ள கப்பல் வரை வந்து சென்றன. இங்கு வாழ்ந்த முஸ்லிம்
வணிகர்கள் சுமத்தரா, ஜாவா, மலாக்கா, மலேயா, பர்மா, இலங்கை ஆகிய கடல் கடந்த
நாடுகளுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். முக்கிய ஏற்றுமதிப் பொருள்களாவன :
அரிசி, சங்கு , மிளகு மற்றும் துணிவகைகள். இறக்குமதிப் பொருட்களாவன : பாக்கு, யானை,
குதிரை, தேங்காய், உலோகங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் (20). நாகூர்
துறைமுகத்திலிருந்து மேற்கு கடற்கரைத் துறைமுகங்களுக்கும் கிழக்குக் கடற்கரையோரமாக
உள்ள பிற துறைமுகங்களுக்கும் வணிகத் தொடர்பு மிக அதிகமாக இருந்து வந்தது. மேலும்
நாகூர் துறைமுகம் வெட்டாறின் கிளையான குடவளாற்றின் முகத்துவாரத்தில் இருந்ததால்,
ஆற்றில் தண்ணீர் அளவு கணிசமாக இருக்கும்போது, ஆற்றினுள் குறைந்த எடையுள்ள கப்பல்கள்
மற்றும் படகுகள் போக்குவரத்து நடந்து வந்தது. இதன்மூலம் உள்நாட்டு விளைபொருட்களை,
துறைமுகத்திற்கு ஏற்றிவர ஏதுவாக இருந்தது (21).
16-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துக்கீசியர் நாகப்பட்டினம் துறைமுகத்தைப்
பிடித்துக் கொண்டனர். இயல்பாக அவர்கள் முஸ்லிம்கள் மீது காட்டிய பகை உணர்வு அங்கு
வாழ்ந்த முஸ்லீம் வணிகர்களை நிலைகுலையச் செய்தது. போர்த்துக்கீசிரியன்
அனுமதிச்சீட்டுடன் (cartaz) முஸ்லீம் வணிகர்களும் வாணிபத்தில் ஈடுபட
அனுமதிக்கப்பட்டனர். ஆனால் முஸ்லீம் வணிகர்கள் அவர்களை விட்டு விலகிச் சென்று
நாகூர் துறைமுகத்திலிருந்து தங்களது வாணிப நடவடிக்கைகளை நடத்தி வந்தனர். நம் நாட்டு
மன்னர்களிடையே ஏற்பட்ட பிணக்குகளினாலும் ஐரோப்பியர்களின் தலையீட்டினாலும்
தமிழகத்தின் அரசியல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக முஸ்லீம் வணிகர்களும்
அவர்களது பொருளாதாரமும் பாதிக்கப்பட்டன. பிரஞ்சு தளபதி லாலி நாகூர் தர்காவை
கொள்ளையிட்டது மட்டுமின்றி நாகூர் துறைமுகத்திலிருந்த முஸ்லிம் வணிகர்களுக்குச்
சொந்தமான இரண்டரை லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் கொள்ளையிட்டுச் சென்றார்
என்பதிலிருந்து முஸ்லிம் வணிகர்களின் செல்வச் சிறப்பையும் அதே சமயத்தில்
அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களையும் அறிய முடிகிறது (22).
1773-ல் மராட்டிய மன்னர் நாகூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களை
டச்சுக்காரர்களுக்கு விற்றுவிட்டனர். இதை ஆற்காடு நவாப் எதிர்த்து தம்
வசப்படுத்திக்கொண்டார் (23). பின்னர் 1788-ல் நாகூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள
277 கிராமங்களை மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா ஆங்கிலேயருக்கு அளித்தார். இதன்பின்
நாகூர் துறைமுகம் ஆங்கிலேயரின் வசமானது (24).
1780-ல் ஹைதர்அலி நாகப்பட்டினத்தின் மீது படையெடுத்து வந்தார். அப்போது நாகூர்
ஆங்கிலேயர் வசமிருந்தது. நாகப்பட்டினத்திலிருந்து டச்சுக்காரர்கள் ஹைதர்அலிக்கு
உதவி அளித்தனர். ஹைதரின் படைகள் நாகூர்ப் பகுதியில் பெரும் அழிவை ஏற்படுத்தின.
நாகூர் பகுதி மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.
நாகூரிலிருந்த வணிகப் பெருமக்களும் பொதுமக்களும் பயந்து பல இடங்களுக்கு
குடிபெயர்ந்தனர் என்று நாகூரிலிருந்த ஆங்கிலேய பிரதியின் அறிக்கை கூறுகிறது (25).
தஞ்சாவூர் பகுதி முழுவதும் 1799-ல் ஆங்கிலேயர் வசமானது. நாகப்பட்டினமும் நாகூரும்
ஒரே நகராகக் கருதப்பட்டது. நாகூர் மாவட்டத் தலைநகராக இருந்தது (26). பின்னர்
நாகப்பட்டினம் மாவட்டத் தலைநகரானது (27). அரசியல் குழப்பங்களினால் குடிபெயர்ந்து
சென்ற வணிகர்களையும், நெசவாளர்களையும் நாகூருக்கு வந்து குடியமர ஆங்கிலேய அரசு பல
சலுகைகளை அளித்தது. முஸ்லீம் வணிகர்கள் மீண்டும் நாகூருக்கு வந்து சேர்ந்தனர்.
நாகூரில் பலவித வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டன (28). வீட்டுவரி தவிர பிற வரிகள் ரத்து
செய்யப்பட்டன. வணிகர்களுக்கு பொருளாதார உதவி செய்யும் பொருட்டு ஆங்கிலேயர் ஒரு
வங்கியை நாகூரில் ஏற்படுத்தினர் (29).
நாகூரில் ஒரு வகை ஊதா நிறத் துணி உற்பத்தி செய்யப்பட்டது. Naguri Blue Cloth எனும்
இத்துணிக்கு இங்கிலாந்திலும் தூரக்கிழக்கு நாடுகளிலும் நல்ல கிராக்கி இருந்தது
(30). நாகூரில் ஒரு சாயத் தொழிற்சாலையும் ஏற்படுத்தப்பட்டது. நெசவாளர்களுக்குப் பல
சலுகைகள் அளிக்கப்பட்டன. நாகூர் பகுதியில் சுமார் 4000 நெசவாளர்கள், 1100 தறிகளில்
இவ்வகை ஊதா துணிகளை உற்பத்தி செய்து ஏற்றுமதிக்கு அளித்து வந்தனர். நெசவாளர்களில்
பெரும்பாலோனோர் முஸ்லிம் மக்கள் என்பது குறிப்பிடத் தக்கது. உற்பத்தியாகும் ஊதா
துணியில் பெரும் பகுதியை முஸ்லிம் வணிகர்கள் வாங்கி ஜாவா, இங்கிலாந்து, மலாக்கா,
இலங்கை ஆகிய நாடுகளுக்கு தங்களது கப்பல்களிலும் ஆங்கிலேய வணிகர்களின் கப்பல்களிலும்
அனுப்பினர். ஆங்கிலேய கம்பெனியும், செட்டியார் இன வணிகர்களும் ஆங்கிலேய தனியார்
வணிக நிறுவனங்களும் இவ்வகைத் துணி ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்தனர். இந்து
வணிகர்களும், முஸ்லிம் வணிகர்களும் ஒற்றுமையுடன் இருந்து வாணிபம் நடத்தி நாகூரின்
வளம் பெருக்கினர் (31).
முஸ்லிம் வணிகர்களான
மரைக்காயர்கள் குறித்த செய்திகள், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள்,
டேனிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயரின் பதிவேடுகளில் நிறைய
காணப்படுகின்றன. மரைக்காயர், நகுதா, மாலுமி, செறாங்கு, சுக்காணி போன்ற பட்டங்களுடன்
ஏராளமான முஸ்லிம் வணிகர்களின் பெயர்கள் இப்பதிவேடுகளில் காணக்கிடக்கின்றன. இவர்கள்
வணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடுகளிலெல்லாம் பெரும் செல்வாக்குடன் விளங்கினர். சில
வணிகர்கள் தங்களுக்குத் தேவையான கப்பல்களை வெளிநாடுகளிலிருந்து வாங்கும் அளவிற்கு
வசதி படைத்தவர்களாக இருந்தனர். 1722-ல் ஆங்கிலேயர் அச்சை நாட்டில் ஒரு வணிகச் சாவடி
ஏற்படுத்தும் பொருட்டு அந்நாட்டு மன்னரிடம் அனுமதி பெற, முகமது காசிம் மரைக்காயர்
மூலமாகவே அணுகவேண்டி வந்தது. இவர் நாகூரைச் சேர்ந்த ஒரு கப்பல் வணிகர்; மேலும்
முகமது காசிம் மரைக்காயர் பினாங்கிலும் கெத்தானிலும் அந்நாட்டு மன்னர்களிடமும்
பெரும் செல்வாக்கு உடையவராக இருந்தார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும் (32).
இவருக்கு ஆங்கிலேய அரசு பல வரிச் சலுகைகளை அளித்துள்ளது (33). இது போன்று
தூரக்கிழக்கு நாடுகளில் சிறப்புடன் விளங்கிய நாகூர் வணிகர்கள் பலர் குறித்த
செய்திகளும் நமக்குக் கிடைக்கின்றன. இவர்களது வணிகச் சாவடிகள் பினாங்கு, அச்சை,
சுமத்தரா, பெரு, கெத்தா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளில் வளமுடன் விளங்கியதை
ஆங்கிலேயரின் பதிவேடுகள் தெரிவிக்கின்றன (34).
1796-ம் ஆண்டு பதிவேடு ஒன்று நாகூரில் சுமார் 70 முஸ்லீம்கள் கப்பல் வணிகர்களாகத்
திகழ்ந்தனர் எனத் தெரிவிக்கிறது. இவர்கள் தங்களுக்குத் தேவையான கப்பல்களை
நாகூரிலேயே கட்டிக் கொண்டனர். இவ்வாண்டில் ஏழு கப்பல்கள் மட்டும் நாகூர் மற்றும்
நாகப்பட்டினத் துறைமுகங்களில் முஸ்லிம் வணிகர்களுக்குச் சொந்தமானவையாகப் பதிவு
செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள வணிகர்கள் இக்கப்பல்களில் தங்கள் வணிகப் பொருட்களை
ஏற்றிச் சென்றிருக்க வேண்டும். இதற்குரிய வாடகை, கமிஷன் போன்றவற்றை கப்பல்
உரிமையாளர்கள் பெற்றுக் கொண்டனர். கப்பல் சரக்குக் கட்டணம், பொருட்களின் மதிப்பில்
14% கமிஷன், 7 1/2% இன்ஷ¥ரன்ஸ் திட்டமும் இருந்தது. பிரிமியம் 16% ஆகும்.
பெரும்பாலும் கப்பல் உரிமையாளர் கப்பலில் செல்வது கிடையாது. கப்பல் தலைவரான
நகுதாவின் பொறுப்பில் கப்பல் ஒப்படைக்கப்படும். நகுதாவும் தனது ஊதியத்திற்குப்
பதிலாக தனது வணிகப் பொருட்களை கப்பலில் ஏற்றிச் செல்லுவார். நாகூர் வணிகர்களின்
வணிக நடைமுறைகள் பழக்கங்கள் குறித்த சுவையான பல செய்திகள் ஐரோப்பியரின்
பதிவேடுகளில் நமக்கு கிடைக்கின்றன (35).
தங்களது கப்பல்களை பதிவு செய்து கொண்டு உரிய சுங்கத் தீர்வைகளை செலுத்திய வணிகர்கள்
மட்டுமின்று பதிவு செய்யப்படாத கப்பல்களும் பல இருந்தன. சுங்கத் தீர்வையை ஏய்த்து
பொருட்களை ஏற்றிவந்த இதுபோன்ற கப்பல்கள் ஆங்கிலேயரால் பறிமுதல் செய்யப்பட்டன.
அபராதமும் விதிக்கப்பட்டது. நாகூர் பக்கிரி மரைக்காயர் 1823-ல் இலங்கையிலிருந்து
அனுமதியின்றி பாக்கு ஏற்றிக் கொண்டுவந்தபோது கண்டுபிடிக்கப்படு அவரது கப்பல்
பறிமுதல் செய்யப்பட்டது (36). கபூல் முகமது மரைக்காயர் தனது கப்பலில் அனுமதின்றி
வங்காளத்திற்கு சங்கு ஏற்றிச் சென்றபோது கப்பல் பறிமுதல் செய்யப்பட்டது (37).
நாகூர் துறைமுகக் கப்பல்களில் நகுதா, சிராங்கு, மாலுமி, கிராணி, சுக்காணி போன்ற
பணிகளில் ஈடுபட்டிருந்த பல முஸ்லிம்களின் பெயர்கள் ஆங்கிலேயரின் பதிவேடுகளில் நிறைய
காணப்படுகின்றன (38).
கி.பி. 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாகூர் மரைக்காயர்கள் தங்களது கப்பல்களை
கொழும்பு, அச்சை, பினாங்கு, மலாக்கா, மலேயா ஆகிய நாடுகளுக்கு வணிக நிமித்தம்
அனுப்பி வந்தனர். ஐரோப்பாவில் நடைபெற்ற போர்களின் தொடர்பாக இந்தியாவிலும்
ஆங்கிலேயருக்கும் பிரஞ்சுக்காரருக்கும் பகை மூண்டது. இப்போர்களில் நடுநிலை வகித்து
வந்த டேனிஷ்காரர்களின் கொடி மற்றும் அனுமதிச்சீட்டுடன் நாகூர் மரைக்காயர்கள் தங்கள்
கப்பல்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வந்தனர். ஆனால் டேனிஷ்காரர்கள்
நடுநிலையிலிருந்து மாறியபோது, அவர்களது அனுமதிச்சீட்டுடன் சென்ற கப்பல்களை பிரஞ்சு
நாட்டு போர்க்கப்பல்கள் வளைத்துப் பிடித்தன. பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையிலிருந்து தங்களை காப்பாற்றக்கோரி நாகூர் முஸ்லிம் வணிகர்கள் ஆங்கிலேய
அரசிடம் விண்ணப்பித்துக் கொள்ளுகின்றனர். இந்த விண்ணப்பத்தில் கையொப்பமிட்டுள்ள
பதினேழு பேர்களுள் பதிமூன்று பேர் முஸ்லிம்கள் ஆவர். அவர்களது பெயர்கள் வருமாறு :-
முகமதலி மரைக்காயர், முகமது சையது மரைக்காயர், அலிசாயபு நகுதா, ஹபீப் முகமது
மாலுமி, பீர் சாஹிப் நகுதா, முத்துனா சாஹிப், சையது இஸ்மாயில் லப்பை, முகமது ஹபீப்
மரைக்காயர், மதார் சாஹெப் நகுதா, சையது முகமது நகுதா, சுலைமான் மாலுமி, பக்கீர்
முகமது நகுதா, சித்தி முகமது இப்ராஹிம் நகுதா (39).
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நாகூர் வணிகர்களின் கப்பல்கள்
வாணிகப் பொருட்களோடு பயணிகளையும் தூரக்கிழக்கு நாடுகளுக்கு ஏற்றிச் சென்றன.
மலாக்கா, மலேஷியா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளுக்கு பெருமளவிற்கு முஸ்லிம்கள்
சென்றனர். அங்கெல்லாம் ஆங்கிலேய ஆட்சி ஏற்பட்டதின் பயனாக தொழிலாளர்கள் நிறைய
தேவைப்பட்டனர். நாகூரிலிருந்தும் இந்நாடுகளுக்குச் சென்றவர்கள் அந்நாடுகளில்
தொழிலாளர்களாகவும், வணிகர்களாகவும் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டும்
இருந்தனர். 1786-ல் பினாங்கும் 1824-ல் சிங்கப்பூரும் உருவானபோது நாகூர் மற்றும்
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மரைக்காயர்கள் அங்கெல்லாம் கணிசமான என்ணிக்கையில்
இருந்தனர். நாகூரிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற மரைக்காயர்கள் தங்களது ஆன்மீகத்
தேவைகளுக்காக அங்கெல்லாம் நாகூர் ஆண்டவர் பெயரால் தர்காக்கள் கட்டி ஆண்டுதோறும்
நாகூரில் நடைபெறுவதுபோல் கந்தூரியும் நடத்தினர். இதுபோன்ற கலாச்சார மையங்கள்
(தர்காக்கள்) சிங்கப்பூரிலும், பினாங்கிலும் இன்ரும் உள்ளன (40). மேலும் நாகூர்
தர்காவில் கந்தூரியின்போது ஏற்றுவதற்காக 'கொடி', கப்பல் மூலம் அனுப்பி வந்தனர்.
1848-ல் சுமார் பத்து கப்பல் உரிமையாளர்கள் மட்டும் நாகூரில் இருந்தனர் என்பதற்கு
அங்கு பதிவாகியுள்ள கப்பல்களின் பெயர்களைக் கொண்டு அறிகிறோம். இவை அனைத்தும்
பாய்மரக் கப்பல்கள். அவையாவன : காதர்மீரா, ஷம்ஷீர், ஜூலிக்ஸ், கூடு காதர் பக்ஸ்,
பதேகாசிம், சகியா, பால காதர், அகமது பக்ஸ் முகமது மைதீன் பக்ஸ், ஜஹாங்கீர், ஷாஹ¥ல்
ஹமீது. இக்கப்பல்கள் சிங்கப்பூர், பினாங்கு, பர்மா, ஆகிய நாடுகளுக்கு பெரும்பாலும்
பயணிகளை ஏற்றிச் சென்றன. குறைந்த அளவில் வணிகப் பொருட்களையும் ஏற்றிச் சென்றன (41).
19-ம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு சில கப்பல் உரிமையாளர்களையும், கப்பல்
வணிகர்களையும் நாகூரில் காண முடிகிறது. இவர்களும் பொருளாதரத்தில் முனைப்பாக இல்லை
என்பதும் தெரிய வருகிறது. இக்காலத்தில் செட்டியார் வணிகர்கள் பெரும் பணக்காரர்களாக
விளங்கினர். முஸ்லிம் வணிகர்கள் பலர் அவர்களிடம் கடன் பெற்று வணிகம் செய்துள்ளனர்.
நாகூரில் வசித்த அரசன் குத்தூஸ் மரைக்காயர், லார்டு ஹாரிஸ் என்ற கப்பலுக்கு
உரிமையாளர். இவர் 1890-ல் சாமிநாத செட்டியார் என்பவரிடம் ரூ.10,000 கடனாகப் பெற்று,
பெற்ற கடனை திருப்பி அளிக்க முடியாமல் கப்பலையே கொடுத்து ஈடு கட்ட வேண்டியதாயிற்று
(42). இவரது சகோதரர் அகமது நைனா மரைக்காயர் ஒரு கப்பல் வணிகர் என்ற செய்தியும்
கிடைக்கிறது (43). மேலும் பல கப்பல் வணிகர்கள் வாழ்ந்திருக்கின்றனர். அவர்களைப்
பற்றிய செய்திகளை அறியக்கூடவில்லை. மரைக்காயர் தெரு, செராங்கு தெரு, மாலுமியார்
தெரு, நகுதா தெரு, பயலட் தெரு என்பன இங்கு வாழ்ந்த கப்பல் வணிகர்களை நினைவு
படுத்துகின்றன.
1867-ம் ஆண்டில் நாகூர் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகங்கள் ஒன்றிணைக்கப்பட்டன.
இருபதாம் நூற்றாண்டில் நாகூர் வணிகர்களும் நாகப்பட்டினத்திலிருந்து தங்களது
வாணிபத்தைத் தொடர்ந்தனர். சிறிய பாய்மரக் கப்பல்கள் மூலம் இலங்கை, மேற்குக்
கடற்கரை, கல்கத்தா, துறைமுகங்கள், ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டத் துறைமுகங்கள்
ஆகியவற்றுடன் சிறிய அளவில் வணிகம் செய்துவந்துள்ள செய்திகள் தெரிய வருகின்றன. ஆனால்
பிற நாடுகளுக்குச் சென்ற செய்திகள் கிடைக்கவில்லை. அதிக எடை கொள்ளளவு உள்ள
ஆங்கிலேயரின் நீராவிக் கப்பல்களுடன் மரைக்காயர்களின் பாய்மரக் கப்பல்கள் போட்டிபோட
முடியவில்லையாதலாலும் ஆங்கிலேலேயரின் பெரும் மூலதனத்துடன் இவர்களது குறைந்த மூலதனம்
ஈடுகொடுக்க முடியாததாலும் ஏறத்தாழ 16-ம் நூற்றாண்டிலிருந்து முஸ்லிம் இனம் சார்ந்த
அரசுகளில் ஆதரவு இல்லாததாலும், கிழக்குக் கடற்கரை முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறு
19-ம் நூற்றாண்டின் இறுதியில் நசிந்து மறைந்து போயிற்று. இதில் நாகூர் வணிகர்களும்
அடங்குவர்.
17-18-ம் நூற்றாண்டுகளில் நற்றமிழ் புலவர்கள் பலர் நாகூரில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இவர்கள் இலக்கிய உலகிற்கும் தமிழுக்கும் நல்ல சேவை புரிந்துள்ளனர்.
இக்காலக்கட்டத்தில் ஏறத்தாழ 30-க்கும் மேற்பட்ட புலவர்களின் பெயர்களும் 50-க்கும்
மேற்பட்ட படைப்புகளும் நமக்கு தெரிய வருகின்றன. நாகூர் தந்த நல்ல தமிழ் புலவர்
வரிசையில் முதலிடம் வகிப்பவர் குலாம் காதிர் நாவலர் ஆவார்கள். திரைகடலோடி தேடிய
திரவியத்தை தக்கார்க்கு வேளாண்மை செய்வதில் நாகூர் வணிகர்கள் சிறந்து விளங்கினர்.
இவர்களது கொடைத் தன்மையினால் பல இஸ்லாமிய இலக்கியங்கள் உருவாகியுள்ளன என்பதை
இஸ்லாமிய இலக்கிய வரலாற்று நூல்கள் பெருமையுடன் பேசுகின்றன (44).
நாகூரின் வணிக, ஆன்மீக கலாச்சார வரலாறு குறித்த ஒரு அறிமுகமே இக்கட்டுரை. நாகூர்
குறித்து பதிவேடுகள் கூறும் விரிவான செய்திகள் மூலம் தமிழக முஸ்லிம்களின் வரலாற்றை
தெளிவுபட தெரிந்துகொள்ள மேலும் பல செய்திகள் நமக்குத் தெரியவருகின்றன.
References
1. T.W. Arnold , the Preacings of Islam, p. 267; Quadir Hussain Khan, South
Indian Mussalmens pp.36-38
2. ஜே.எம். சாலி, தமிழகத்து தர்காக்கள், சென்னை,. 1981, பக்கம் -32.
3. S,. Mohamed Hussain Nainar, Tuzuki Wallahjahi, Madras - part I p.60.
4. M. Abdul Rahim, the Dargah of Nagore and Culture of Tamil Muslims, in
Bulletin of the Institute of Traditional Culture, Madras, 1973, Jan to June pp.
92-104.
5. M. Joseph Costilloe, Francis Xavior, His lilfe and his time, Rome, 1997 - Vol
II pp. 544-545.
6. V. Vridhagirisan, The Nayak, of Tanjore, Annamalai Nagar, 1942 - pp-32-33; M.
Abdul Rahim op. cit.
7. ஜே.எம். சாலி, தமிழகத்து தர்காக்கள், சென்னை, பக்கம் -34
8. Tapan Roy Choudry, Jan company in Coromandel 1605-1690. A study in the inter
relations of European Commerce and traditional economies. The Hague 1963-pp.
15-16.
9. The Cambridge History of India Vol. V. p. 127; Viridagirisan, opt. cit. pp.
155-6.
10. Thanjavur District Collectorate Records (TDCR) No. 3396 dt. 11th Sep. 1785.
11. Rangachari, Inscription in the Madras Presidency (Tanjore Dist.) no. 893 A &
B.
12. Thanjavur Saraswathi Mahal Modi script record (TR) 4-488; 2-271, 187/C2;
104/C/9.
13. TDCR No. 3396 July 9th 1783.
14. TDCR No. 3331, p. 63.
15. Tazaki Wallajahi, pt. II pp. 196-197.
16. TDCR No. 3268. pp. 182-183.
17. ibid No. 3416 p.9. 19th July 1814; No. 3224, pp. 64-65 7th July 1788; No.
3496 pp. 69. 20th Feb. 1809.
18. G.O. Ms. 882 Law Dept. 17-2-1934.
19. B.S. Baliga, Tanjore District hand Book.
20. S. Arasarathnam Merchants companies and come in Coromandel 1600 - 1740,
Cambridge- pp. 27-29; TDCR No. 3335 p. 13.
21. TDCR No. 3271 p. 195.
22. Dodwell, the Madras Despatches, 1754-1765, p. 146. Sanjay Subramaniyam,
Political Economy of South India and commerce, cambridge. p.92.
23. Tanjore Original papers, Vol I p. 239.
24. C.K. Srinivasachari, Maratha Rule in Carnatic p.306; Saraswathi Mahal Modi
Script (Tr) No. 5-395.
25. Military consultations 1781-74A, letter from Sir Ire coot to Col. Barthwit,
Ist March 1761 and also p. No. 728; M.C. 1781-47D p. 1371.
26. TDCR No. 3228 p.82.
27 ibid No. 3182 p.250.
28. FSG Public sundries Vol. No. 36, p.39; TDCR 4238 p. 2324.
29. TDCR No. 3175 p. 163.
30. FSG Commercial consultations for 1821, Vol. 29, p.1582.
31. Public consultations, 1806 pp. 56-57; Revenue sundries 1793-94 Vol. 18 pp.
1-15; TDCR No. 3349, p.5; No. 3325 p.65.
32. Public sundries No. 21, 25th June 1772.
33. FSG Board of Revenue No. 404 18th March 1805 pp 1842-1848.
34. TDCR No. 3337 p.45
35. TDCR No. 3325 p. 65; Public consultation Vol. 340 pp. 2450-60; Pleading of
Mayors Court 1745, Vol V. pp. XV-XXI; India and Indian Ocean 1500-1800 (Ed)
Ashin Das Gupta and M.N. Pearson, Calcutta-1987. pp. 10-19.
36. TDCR No. 4326 pp. 14-15
37. ibid No. 3336 pp. 38-42.
38. ibid No. 4252 pp. 148-49
39. FSG public consultation 1808, Vol 339, pp. 1314-1315.. 17th Feb. 1808.
40. Susan Bayly, Saints, Goddesses and Kings, Muslims and Chiristians in South
Indian Society 1700-1900 Cambridge p.93-94.
41. Public consultation, Vol. No. 831 p. 7-9. 1848; Vol. 832 p.7-9, 1848.
42. Indian Law Reporter Madras Series Vol. IXXII 1889 June - Dec. p.26-31.
43. Nagore Registration Dept. document No. 904/1893.
44. இஸ்லாமிய தமிழ்ச் சிற்றிலக்கிய மாநாட்டு மலர், புதுக்கோட்டை 1992-பிப்ரவரி,
மு.ஜாபர் முஹைய்தீன்,
நாகூர் தந்த நற்றமிழ் புலவர்கள்.
நன்றி : இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆய்வுக்கோவை
நன்றி : ஜெ.ராஜா முகமது M.A., B.Sc. & 'சொல்லரசு' மு.ஜாபர் முஹையதீன்.
Send your Comments to abedheen@yahoo.com
|